பெரும்பாறையில் வாழை தோட்டத்தை சேதப்படுத்திய ஒற்றை யானை

யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானை
யானை
Published on

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தடியன்குடிசை, பெருங்கானல் ஆகிய பகுதிகளில் சமீபகாலமாக ஒற்றை யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் யானைகள் அங்குள்ள வாழை மரங்களையும், காபி உள்ளிட்ட பயிர்களையும் நாசப்படுத்துகின்றன. மேலும் தோட்டங்களில் உள்ள வீடுகளையும் சேதப்படுத்துகின்றன. இன்று அதிகாலை ஒற்றை யானை ஒன்று பெரும்பாறை ஊருக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை செல்லும் வழியில் தனியார் தோட்டங்களில் உள்ள இரும்பு கேட்டுகளை உடைத்து சென்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

எனவே யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com