பெர்த் டெஸ்ட்: 403 ரன்னில் இங்கிலாந்து ஆல்அவுட்; 36 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது

பெர்த் டெஸ்டில் 4 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து, கடைசி 36 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து முதல் இன்னிங்சில் 403 ரன்கள் சேர்த்துள்ளது.
பெர்த் டெஸ்ட்: 403 ரன்னில் இங்கிலாந்து ஆல்அவுட்; 36 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது
Published on


140 ரன்கள் சேர்த்த தாவித் மலன்

5-வது விக்கெட்டுக்கு தாவித் மலன் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. தாவித் மலன் சதமும், பேர்ஸ்டோவ் அரைசதமும் அடித்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்திருந்தது. தாவித் மலன் 110 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 75 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


119 ரன்கள் சேர்த்த பேர்ஸ்டோவ்

இன்று 2-வது ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பேர்ஸ்டோவ் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய தாவித் மலன் ஆஸ்திரேலியா 368 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 140 ரன்களில் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்தது. மலன் அவுட்டான சிறிது நேரத்தில் பேர்ஸ்டோவ் 119 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


விக்கெட் வீழ்த்தி மகிழ்ச்சியில் ஸ்டார்க்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com