மன்னார்குடி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்: கொலையா? போலீஸ் விசாரணை

மன்னார்குடி அருகே வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்: கொலையா? போலீஸ் விசாரணை
Published on

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே உள்ள வடகரை குருவை மொழி அகமலான் வாய்க்கால் ஒரத்தில் உள்ள மரத்தில் 30 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மன்னார்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் உடலை மீட்டு  மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  அவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது  கொலை செய்து பிணத்தை மரத்தில் தொங்க விட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com