காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பமாட்டார்கள்- எடியூரப்பா

லோக் ஆயுக்தா அமைப்பை முடக்கியவர் சித்தராமையா என்றும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். #KarnatakaElections2018 #Yeddyurappa
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பமாட்டார்கள்- எடியூரப்பா
Published on

கதக் மாவட்டத்தில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் சிறைக்கு சென்று வந்ததாக ஒவ்வொரு முறையும் முதல்-மந்திரி சித்தராமையா கூறி வருகிறார். என் மீது இருந்த வழக்குகளை கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. நான் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபித்துள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என மாநில மக்களுக்கும் தெரியும். எனவே சித்தராமையா, நான் சிறைக்கு சென்று வந்தேன் என்று சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். அப்போது சித்தராமையா, அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்கள் சிறைக்கு செல்வது உறுதி. மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விரும்பவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் லோக் ஆயுக்தா அமைப்பை முடக்கிவிட்டு தனக்கு கீழ் செயல்படும் ஊழல் தடுப்பு படையை சித்தராமையா கொண்டு வந்தார். அந்த ஊழல் தடுப்பு படை இருப்பதால் தான் சித்தராமையாவும், பிற மந்திரிகளும் தாங்கள் செய்த ஊழல்களில் சிறைக்கு செல்வதில் இருந்து தப்பித்து வருகின்றனர். லோக் ஆயுக்தா அமைப்பு உறுதியாக இருந்திருந்தால் சித்தராமையா எப்போதோ சிறைக்கு சென்றிருப்பார். லோக் ஆயுக்தா அமைப்பை முடக்கிவிட்டு, தற்போது அந்த அமைப்பு பலப்படுத்தப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த முறை மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று சித்தராமையா கனவு காண்கிறார். அது பலிக்காது. மக்கள் தெளிவாக உள்ளனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மாநில மக்கள் நம்பமாட்டார்கள். பா.ஜனதாவை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர். பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி. நான் முதல்-மந்திரி ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com