3 ‘டி’ யால் மக்களுக்கு பெரும் தொல்லை -மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு மு.க.ஸ்டாலின், 3டி யால் மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்படுகிறது என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
3 ‘டி’ யால் மக்களுக்கு பெரும் தொல்லை -மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து  பேசியதாவது:

கலைஞருக்கு வெண்கல சிலை, காரைக்காலில் முக்கிய சாலைக்கு கலைஞர் பெயர், மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கு கலைஞர் பெயர் என  கூறினார். எனவே அவருக்கு என் நன்றியை இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் முன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுவை மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கலைஞர்.  

ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியால் புதுச்சேரி மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. பாஜக தேர்தல் அறிக்கை பொய்யானது. எனவே தான், பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மோடியை மோசடி என்றே கூப்பிடுங்கள் என கூறி வருகிறேன்.  வெளிநாடு பிரதமர் போல் மோடி செயல்படுகிறார். மக்கள் விருப்பப்படி நீங்கள் நடக்க விரும்புவதாக கூறுகிறீர்கள். அப்படி செய்யவேண்டுமென்றால்  ஆட்சியை விட்டு விலகுங்கள். அதுவே மக்கள் விருப்பம்.

நாட்டுக்கு மோடி, தமிழகத்திற்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண் பேடி ஆகிய 3 ‘டி’ யினால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்  என்பதே உண்மை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com