தொடர்ந்து 8536 நாட்கள் முதல்வராக இருந்து சாதனை படைத்த பவன் சாம்லிங்

சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த பவன் சாம்லிங் தொடர்ந்து 24 ஆண்டுகள் முதல்வராக இருந்ததன் மூலம் தொடர்ந்து அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். #PawanChamling #LongestServingCM #Sikkim
தொடர்ந்து 8536 நாட்கள் முதல்வராக இருந்து சாதனை படைத்த பவன் சாம்லிங்
Published on

காங்டாக்:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் முதல்வராக சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவரான பவன் சாம்லிங் உள்ளார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி முதல்வராக பதவி ஏற்றார். அதன்பிறகு தொடர்ந்து ஐந்தாவது முறையாக அவர் ஆட்சி புரிந்து வருகிறார். இதன்மூலம் நீண்ட காலம் முதல்வராக இருந்த மேற்குவங்க முன்னாள் முதல்வரும், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசுவின் சாதனையை சாம்லிங் இன்று முறியடித்துள்ளார்.

ஜோதிபாசு, 23 ஆண்டுகள் 137 நாட்கள் மேற்குவங்க முதல்வராக இருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ஜோதிபாசு 1977 முதல் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து முறை முதல்வராக பணியாற்றினார். உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார். அந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜோதிபாசு

தற்போது 68 வயதாகும் சாம்லிங், 1985ல் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். 1994ல் முதல் முறையாக முதல்வரானார். அவர் இதுவரை 8536 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைவர் கருணாநிதி 18 ஆண்டுகள் 9 மாதங்கள் 23 நாட்களுக்கு முதல்வராக இருந்துள்ளார். #PawanChamling #LongestServingCM #Sikkim

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com