கரீபியன் பிரிமீயர் லீக்: கிறிஸ் கெய்ல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கரீபியன் பிரிமீயர் லீக்: கிறிஸ் கெய்ல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
Published on

முதல் இரண்டு இடங்கள் பிடித்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் குவாலிபையர் 1-ல் மோதின. இந்த ஆட்டம் நேற்று நடைபெற்றது. ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் வெயின் பிராவோ டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டன் கிறிஸ் கெய்ல், அதிரடி வீரர் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த மொகமது ஹபீஸ் 21 ரன்னும், பிராண்டன் கிங் 30 ரன்னும், பிராத்வைட் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார். கிறிஸ் கெய்ல் அவுட்டாகாமல் 51 பந்தில் தலா மூன்று பவுண்டரிகள், சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுக்க செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

பின்னர் வெயின் பிராவோ தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. பேட்ரியாட்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 19.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் கெய்ல் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com