காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- வேன் டிரைவர் தற்கொலை

திருவெறும்பூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- வேன் டிரைவர் தற்கொலை
Published on

திருவெறும்பூர்:

திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் விஜய் (வயது 23), வேன் டிரைவர். விஜய் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் அவரது தந்தை சத்தியமூர்த்திக்கு தெரியவந்தது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காதல் விவகாரம் தொடர்பாக தந்தை-மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவும் இது தொடர்பாக அவர்கள் இடையே மீண்டும் தகராறு உருவானது. உடனே விஜய் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 

அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்னால் தோட்டத்தில் உள்ள மரத்தில் விஜய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நவல்பட்டு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

காதல் பிரச்சினையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com