உறவினர்களின் கிண்டலுக்கு பயந்து பச்சிளம் குழந்தையை கொன்ற பெற்றோர்

உறவினர்கள் கேலி செய்வார்கள் என அஞ்சி, பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். #WestBengal
உறவினர்களின் கிண்டலுக்கு பயந்து பச்சிளம் குழந்தையை கொன்ற பெற்றோர்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் தினக்கூலியாக வேலை பார்க்கும் 48 வயதுடைய நபருக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். மேலும், பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி, பேரக்குழந்தைகளும் உள்ள நிலையில், அவரது மனைவி மீண்டும் கருவுற்றார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று, சப்திபாரி கிராமத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு கணவன்- மனைவி இருவரும் சென்றபோது, மனைவி குழந்தையை பெற்றெடுத்தார். 48 வயதில் குழந்தை பெற்றதால், தனது சொந்த பிள்ளைகள் முன்பு அவமானமாக இருக்கும் எனவும், மேலும் உறவினர்களும் கிண்டல் செய்வார்கள் என்பதால் பிறந்த குழந்தையை கொன்று அருகில் இருந்த குளத்தில் வீசியுள்ளனர்.

பச்சிளம் குழந்தை குளத்தில் இறந்து மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தகவல் அளித்தனர். போலீசார் சமபவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது, பெற்றோரே குழந்தையை கொன்று வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பெற்ற தாயும் தந்தையுமே, குழந்தையை கொலை செய்து குளத்தில் வீசிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengal

X

Maalai Malar
www.maalaimalar.com