பாபநாசத்தில் அரசு பஸ் மோதி பெண் படுகாயம்

பாபநாசத்தில் அரசு பஸ் மோதி பெண் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசத்தில் அரசு பஸ் மோதி பெண் படுகாயம்
Published on

பாபநாசம்:

பாபநாசம் தெப்பக்குளத் தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ் மனைவி வாசுகி (வயது 57). இவர் நேற்று பாபநாசம் கடைவீதியில் நடந்து சென்ற போது அரசு நகரப்பேருந்து மோதி படுகாய மடைந்தார். பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து பாபநாசம் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பாபநாசம் நகர சுத்தி தொழிலாளி காலனியில் வசித்து வருபவர் முனியப்பன் (வயது45). இவர் பாபநாசம் பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பாபநாசம் தெற்கு வீதி மெயின் ரோட்டில் துப்புறவு பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது குறித்து பாபநாசம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் துறையூர் மாரிமுத்து (37) என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com