எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி- ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி- ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்
Published on

அம்பத்தூர்:

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது கூட்டம் அம்பத்தூரில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.அதற்கு காரணம் கச்சத்தீவு நம்மிடம் இல்லை.கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தம். சில துரோகிகளால் தமிழகத்தில் புதிய கட்சி துவங்கப்படும் என்று தகவல்கள் வருகிறது.

அதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் எல்லாம் சோலைக்காட்டு பொம்மைகள். அதனை கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம்.

ஆர்.கே. நகரில் உழைத்தகளிப்பில் கண் அசந்த நேரம் 20 ரூபாய் நோட்டைகாட்டி ஏமாற்றி விட்டார்கள். இனி யாரும் ஏமாறமாட்டோம். கட்சியையும், ஆட்சியையும் நாங்கள் இருவரும் இணைந்து சிறப்பாக செயல் படுத்துவோம்.

முன்னதாக மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., ஓ.பன்னீர் செல்வத்துக்கு வீரவாள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊரக தொழிற்துறை அமைச்சர் பா.பென்ஜமீன், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் வி.மூர்த்தி, எஸ்.அப்துல் ரஹிம், கே.குப்பன், கா.சு.ஜனார்தனம், தட்சிணாமூர்த்தி, ராஜேந்திரன், ஜி.ராஜேஸ்வரி, புலவர் ரோஜா, பகுதி செயலாளர்கள் என்.அய்யனார், வேலாயுதம், கே.கிருஷ்னன், மற்றும் முல்லைதயாளன், எம்.டி. மைக்கேல்ராஜ் , டன்லப்வேலன், கே.பி. முகுந்தன், ஏ.எல்.சரவணன், வெள்ளை, எ.லட்சுமணன், அரிகிருஷ்ணன், லித்தோ மோகன், தனலட்சுமி, குப்பம்மாள் வேலாயுதம், வித்யாலட்சுமி முகுந்தன், முகப்பேர் இளஞ்செழியன்

வழக்கறிஞர் முருகேசன், அறிவரசன், உட்பட மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ செய்திருந்தார். முடிவில் அம்பத்தூர் பகுதி செயலாளர் என். அய்யனார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com