உடன்குடி அருகே ஊராட்சி செயலாளர் வி‌ஷம் குடித்து தற்கொலை

உடன்குடி அருகே ஊராட்சி செயலாளர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடன்குடி அருகே ஊராட்சி செயலாளர் வி‌ஷம் குடித்து தற்கொலை
Published on

திருச்செந்தூர்:

உடன்குடி அருகேயுள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்த மாநாடு தண்டுப்பத்து ஊராட்சி செயலராக பணிச் செய்து வந்தவர் சுந்தரம் (வயது45). இவர் கூடுதலாக அதே பகுதி நயினார்பத்து ஊராட்சி செயலராகவும் பணியாற்றி வந்தார். இதனால் அவருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டதாம்.

இதுபற்றி அவர் தனது வீட்டினரிடம் கூறி புலம்பியுள்ளார். இந்த நிலையில் நேற்று அலுவலகத்துக்கு செல்வதாக கூறி சென்றார். அங்கு பணி முடித்து மாலையில் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது வீட்டினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் அப்பகுதி காட்டுப்பகுதியில் அவர் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி மெஞ்ஞானபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பணிச்சுமை காரணமாக சுந்தரம் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுந்தரம் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தரத்தின் அலுவல கத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து சுந்தரத்திற்கு கூடுதல் பணிகளை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் அடுத்த வாரம் மீண்டும் ஆய்வு செய்ய வருவதாகவும் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே சுந்தரம் தற்கொலை செய் திருக்கலாம் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com