பள்ளிப்பட்டு அருகே விவசாயி கடத்தி கொலை- போலீசார் விசாரணை

பள்ளிப்பட்டு அருகே விவசாயியை கடத்தி கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு அருகே விவசாயி கடத்தி கொலை- போலீசார் விசாரணை
Published on: 

பள்ளிப்பட்டு:

பள்ளிப்பட்டை அடுத்த தாங்கல் காலனியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 41) விவசாயி. இவரது மனைவி மெதிரிஷா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற தனசேகர் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.

இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள வெளியகரம் மலையடி வாரத்தில் தனசேகர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனசேகரை மர்மகும்பல் கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவருக்கு யாருடனும் மோதல் இருந்ததா? பெண் தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே தனசேகர் எப்படி இறந்தார் என்ற விபரம் தெரியவரும்.

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் தனசேகரின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. #Tamilnews

X