பாலக்காடு அருகே கடன் கேட்டு வந்த நண்பரை கொன்று புதைத்த வாலிபர்

பாலக்காடு அருகே கடன் கேட்டு வந்த நண்பரை கொன்று புதைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையுண்ட மணி.
கொலையுண்ட மணி.
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி அகழி அருகே உள்ளது கரிவடம்முட்டு காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் மருதன் (வயது 62). கூலித்தொழிலலாளி. இவரது நண்பர் மணி என்ற கிருஷ்ணசாமி (59). கடந்த 20 நாட்களுக்கு முன்பு மருதனிடம் மணி கடன் கேட்டார். இரவு வீட்டுக்கு வா. பணம் தருகிறேன் என்று மருதன் கூறினார்.

அதன்படி அன்று இரவு மருதன் வீட்டுக்கு மணி சென்றார். அப்போது பணத்துடன் மருதன் தயாராக இருந்தார். பணம் வாங்கும் முன்பு இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மருதன் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து மணியின் தலையில் வெட்டினார். இதில் மணியின் தலை 2- ஆக பிளந்தது. மணி சிறிது நேரத்தில் ரத்தவெள்ளத்தில் பிணமானார்.

பின்னர் அவரின் உடலை ஒரு சாக்கு பையில் மூட்டை கட்டி ஓரமாக வைத்து விட்டு அன்று இரவு மருதன் தூங்கினார். அடுத்த நாள் தனது படுக்கை அறையில் ஆழமாக குழிதோண்டி மணியின் உடலை அதில் புதைத்தார். 2- நாட்களுக்கு பின்னர் எதுவும் நடக்காதது போல் மணி வெளியில் நடமாடினார்.

இந்தநிலையில் திடீரென மாயமான மருதனை அவர்களது உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று இரவு மணி மற்றொரு நண்பரிடம் மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது செத்து போனவன் எப்படி தேடினாலும் கிடைக்க மாட்டான். ஏன் அவனை தேடுகிறார்கள். நான் தான் அவனை கொன்று புதைத்து விட்டேனே என்று கூறினார். அதிர்ச்சியடைந்த நண்பர் இது குறித்து மணியின் உறவினரிடம் தெரிவித்தார். அவர்கள் அகழி போலீசில் புகார் செய்தனர். அகழி டி.எஸ்.பி. சுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மருதனின் படுக்கை அறையை தோண்டி மணியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மணியின் உடல் அகழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து மருதனிடம் விசாரணை நடத்தியபோது மணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் மணியை கைது செய்து கடன் கேட்டு வந்தபோது எதனால் தகராறு ஏற்பட்டது? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com