பரபரப்பாக சென்ற அபு தாபி டெஸ்ட்- 4 ரன்னில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

அபு தாபியில் நடைபெற்று வந்த பரபரப்பான முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 171-ல் ஆல்அவுட்டாக்கி நியூசிலாந்து 4 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. #PAKvNZ
பரபரப்பாக சென்ற அபு தாபி டெஸ்ட்- 4 ரன்னில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
Published on

74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹசன் அலி, யாசிர் ஷா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த நியூசிலாந்து 249 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இதனால் பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று மேலும் 11 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.


சோதி

4-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் அசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. அசாத் ஷபிக் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 155 ரன்னிற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.

ஒருபக்கம் விக்கெட் வீழந்தாலும் மறுமுனையில் அசார் அலி அரைசதம் அடித்து வெற்றிக்காக போராடினார். வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் 9-வது விக்கெட்டுக்கு வந்த ஹசன் அலி ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் 164 ரன்கள் எடுத்திருந்தது.


அசார் அலி - அசாத் ஷபிக்

வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டுக்க அசார் அலி உடன் முகமது அப்பாஸ் ஜோடி சேர்ந்தார். அப்பாஸை எதிர்முனையில் வைத்துக் கொண்டு அசார் அலி ஒவ்வொரு ரன்னாக எடுத்தார். 11 ஓவர்கள் தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்தார் அசார் அலி. இறுதியில் 65 ரன்கள் எடுத்த நிலையில் பட்டேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆக பாகிஸ்தான் 171 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com