தொடரை தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட்- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்ப்பு

தொடரை தீர்மானிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆகியுள்ளது. #PAKvNZ
வாட்லிங்
வாட்லிங்
Published on

இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

ராவல், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லாதம் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ராவல் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராவல் 45 ரன்கள் எடுத்தும், கேன் வில்லியம்சன் 89 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.


ஐந்து விக்கெட் வீழ்த்திய பிலால் ஆசிப்

விக்கெட் கீப்பர் வாட்லிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் 42 ரன்னுடனும், சோமர்வில் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சோமர்வில் நேற்று எடுத்திருந்த 12 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்டேல் 6 ரன்னிலும், போல்ட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் அரைசதம் அடித்த வாட்லிங் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 116.1 ஓவர்கள் விளையாடி 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது.


பிலால் ஆசிப் பந்தில் சோமர்வில் க்ளீன் போல்டாகிய காட்சி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com