போதை மருந்து கடத்த முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் ஹெராயின் போதைப் பொருளை கடத்த முயன்ற பாகிஸ்தான் கடத்தல்காரரை இந்திய அதிரடி படையினர் சுட்டுக்கொன்றனர்.
போதை மருந்து கடத்த முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக்கொலை
Published on

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் உள்ள பாரேக் என்னும் இடத்தில் எல்லையை கடந்து இந்தியா அமைத்துள்ள தடுப்பு வேலியை நோக்கி பாகிஸ்தானியர்கள் 2 பேர் நேற்று வேகமாக முன்னேறி வந்தனர். அவர்களை அதிரடிப்படையினர் திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர். அதற்கு மறுத்த இருவரும் அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனால் சிறப்பு அதிரடிப்படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் கடத்தல்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதைக்கண்டு அவருடன் வந்த இன்னொருவர் அங்கிருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் ஓடிவிட்டார். கொல்லப்பட்டவர் கடத்திவந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி, 17 தோட்டா, 2 மொபைல் போன், 3 சிம்கார்டு, பாகிஸ்தான் பணம் ரூ.110 ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com