நாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா விருப்பம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி நாளை மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்பதால் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில தினங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன.
இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் நாளை இந்தியா அணி வெற்றிபெற வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமாவான மஹ்மூத் ஹஸன் என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எட்டவா நகரில் வாழ்ந்து வருகிறார்.

