வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்கிறது

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று கராச்சியில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. #PAKvWI
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்கிறது
Published on

இந்த சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் பாதுகாப்பி காரணம் காட்டி எந்தவொரு சர்வதேச அணியும், வீரர்களும் பாகிஸ்தான் சென்று விளையாட விரும்பவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலன் அளிக்கவில்லை. ஜிம்பாப்வே அணி மட்டும் 2015-ல் பாகிஸ்தான் சென்று இரண்டு டி20, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. பின்னர் கடந்த வருடம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை பாகிஸ்தான் மண்ணில் நடத்தியது. மேலும், உலக லெவன் அணியை பாகிஸ்தான் அழைத்து மூன்று டி20 போட்டியை நடத்தியது.

இதன்மூலம் வெளிநாடு அணிகளுக்கு பாதுகாப்பு விவகாரத்தில் நம்பிக்கை வரவழைக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் வர இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com