புதிய காஷ்மீர் வரைபடம் - பாகிஸ்தான் எதிர்ப்பு

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய காஷ்மீர் வரைபடத்துக்கு அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி
Published on

இஸ்லாமாபாத்:

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்தியா வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்குடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய காஷ்மீர் வரைபடத்துக்கு அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா வெளியிட்டுள்ள வரைபடத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதி இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் வரைபடங்களுக்கு முரணான வகையில் வெளியாகி உள்ள இந்த வரைபடத்தை பாகிஸ்தான் நிராகரிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com