குல்பூஷன் ஜாதவுக்கு அரசு வக்கீலை நியமிக்க பாகிஸ்தான் அரசு மனு

மரண தண்டனை தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய குல்பூஷன் ஜாதவுக்காக அரசு வக்கீலை நியமிக்க வலியுறுத்தி, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் பாகிஸ்தான் அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
குல்பூஷன் ஜாதவ்
குல்பூஷன் ஜாதவ்
Published on

இஸ்லாமாபாத் :

இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. அதை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கில், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தும் நோக்கத்தில், ராணுவ கோர்ட்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய குல்பூஷன் ஜாதவுக்காக அரசு வக்கீலை நியமிக்க வலியுறுத்தி, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் பாகிஸ்தான் அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com