

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப் மகன் மற்றும் மகள் மீது ‘பனாமா கேட்’ ஊழல் புகார் கூறியது. அதையொட்டி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் நவாஸ்செரீப் பிரதமர் பதவியையும், எம்.பி. பதவியையும் இழந்தார்.
இதற்கிடையே இந்த வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக நவாஸ்செரீப் குடும்பத்தினர் மீதான வழக்குகள் குறித்த ஆவணங்கள் 2 வாகனங்கள் மூலம் 16 பெட்டிகளில் எடுத்து வரப்பட்டது.
இறுதியில் நவாஸ்செரீப், அவரது மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை விசாரணை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் நிதி மந்திரி இஷாக்தர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.