ரிக்‌ஷா மீது பஸ் மோதிய விபத்தில் 10 பேர் பலி - பாகிஸ்தானில் சோகம்

பாகிஸ்தானின் சங்கார் மாவட்டத்தில் ரிக்‌ஷா மீது பஸ் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்தில் கவிழ்ந்த பஸ்
விபத்தில் கவிழ்ந்த பஸ்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் சங்கார் மாவட்டத்தில் ரிக்‌ஷா ஒன்றில் 10க்கு மேற்பட்டோர் இன்று மதியம் சென்று கொண்டிருந்தனர். கட்ராவ் என்ற பகுதியில் வந்தபோது ரிக்‌ஷா மீது பஸ் வேகமாக மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ரிக்‌ஷாவில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், பஸ்சில் பயணித்தவர்களில் உள்பட 24 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com