

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் நவுஷெரா செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இன்று காலை 10 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகள் மூலம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காரணமாக அங்குள்ள ஐந்து பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலால் 5 இந்திய வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.