பத்மநாப சுவாமி கோவிலில் 15-ந் தேதி வரை தரிசனம் ரத்து

பத்மநாப சுவாமி கோவிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து வருகிற 15-ந் தேதி வரை கோவிலுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
பத்மநாப சுவாமி கோவில்
பத்மநாப சுவாமி கோவில்
Published on

திருவனந்தபுரம் :

கொரோனா பரவல் காரணமாக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் மார்ச் மாதம் இறுதியில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

ஊரடங்கில் தளர்வுகள் காரணமாக, 5 மாதத்துக்கு பிறகு கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் மீண்டும் கோவில் திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பத்மநாப சுவாமி கோவிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அதிரடியாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. வருகிற 15-ந் தேதி வரை கோவிலுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com