தொப்பி சின்னம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். டெல்லி ஐகோர்ட்டில் கேவியட் மனு

தொப்பி சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Published on

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனி சாமி, ஓ.பி.எஸ். அணிக்கு வழங்கிய தேர்தல் கமி‌ஷன் உத்தரவை எதிர்த்து டி.டி.வி. தினகரன் டெல்லி கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

அந்த நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னம் வழங்க கோரி அவர் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தினகரனின் கோரிக்கையை டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்தது. தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் கமி‌ஷன்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்து அவரது மனுவை நீதிபதி இந்தர்மித் கவூர் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com