பாராளுமன்றத்தை இன்றும் முடக்கிய எதிர்க்கட்சிகள் - வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி

பாராளுமன்ற கூட்டத்தொடரில் 7-வது நாளாக இன்றும் மாநிலங்களவையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடங்கியதால் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
பாராளுமன்றத்தை இன்றும் முடக்கிய எதிர்க்கட்சிகள் - வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி
Published on

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையில் அமளியை ஏற்படுத்தி வருகின்ன. இதன் காரணமாக முதல் வாரம் முழுவதும் பாராளுமன்றப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மாநிலங்களவையில் எந்த அலுவலும் நடைபெறவில்லை.

7-வது நாளான இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை காலை 12 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com