

சென்னை:
பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவை தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. நாளை சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
அதேபோல், சட்டப்பேரவை தொடர் குறித்து விவாதிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை தவறாமல் சட்டசபைக்கு வர வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, வறட்சி, நீட் தேர்வு, மாட்டிறைச்சி உள்ளிட்ட மக்கள் பிரச்சினை தொடர்பாக தொடர்பாக பேரவையில் கேள்வி எழுப்புவோம் என்று தெரிவித்தார்.
அதேபோல், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.