அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று உயிரிழந்தார். டெல்லி வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோரும் புறப்பட்டுச் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com