கொரோனாவுக்கு தடுப்பு ஊசி கண்டு பிடித்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும் - ஐ.நா. பொதுச்செயலாளர் சொல்கிறார்

கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பது மட்டுமே உலகை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ்
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ்
Published on

ஜெனிவா:

கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு ஆண்டு ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கூறியதாவது:- 

கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பான மற்றும் பயன்பெறும் தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பது மட்டுமே உலகை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.  கொரோனாவுக்கான தடுப்பு ஊசி மட்டுமே லட்சக்கணக்கான மக்களையும், பொருளாதாரத்தையும் காப்பாற்ற உதவும். எல்லா உலக நாடுகளும் தடுப்பு ஊசியை 2020-ம் ஆண்டுக்குள் கண்டுபிடிக்க தீவிரமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com