ஒன்பிளஸ் 5T விரைவில் வெளியாகும் என தகவல்

ஒன்பிளஸ் 5 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை தொடர்ந்து, அந்நிறுவனம் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் 5T விரைவில் வெளியாகும் என தகவல்
Published on

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 5 இந்தியாவில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில் அந்நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனினை வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் 5T நவம்பர் 5-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்தியா மற்றும் சீனா தவிர மற்ற சந்தைகளில் ஒன்பிளஸ் 5 விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா உள்ளிட்ட சந்தைகளில் விற்று தீர்ந்த ஒன்பிளஸ் 5, மீண்டும் விற்பனைக்கு வழங்கப்படவி்ல்லை. அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய சாதனத்தை வெளியிடலாம் என தகவல்கள் வெளியானது. அவ்வாறு ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் நவம்பர் மாதவாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் இத்தகவல் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், ஒன்பிளஸ் இணை நிறுவனர் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது. ஒன்பிளஸ் 5T வெளியீடு தாமதமானாலும், டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 5 போன்றே வளைந்த எட்ஜ் மற்றும் மெட்டல் பாடி சார்ந்த வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் T அப்டேட் என்பதால் முந்தைய ஒன்பிளஸ் 3T அப்டேட் போன்றே இம்முறையும் ஒன்பிளஸ் 5 கொண்டிருந்த ஹார்டுவேர் அம்சங்களை ஒன்பிளஸ் 5T கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் புதிய ஒன்பிளஸ் 5T ஒரே டூயல் கேமரா அமைப்பு, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 6 ஜிபி / 8 ஜிபி ரேம், டூயல் சிம் ஸ்லாட் உள்ளிட்டவை கொண்டிருக்கலாம். மற்ற அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பெரிய டிஸ்ப்ளே என்பதால் பேட்டரியும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com