

பெங்களூருவில் நடைபெற்ற காமிக் ஆன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 5T லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.
மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் பின்புறம் வெள்ளை நிறமும், மென்மையான சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் மற்றும் ஸ்டார் வார்ஸ் பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இடது புறத்தில் அலெர்ட் ஸ்லைடர் மற்றும் சிவப்பு நிறம் கொண்டுள்ளது.
புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ள நிலையில், சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் சிறப்பம்சங்கள்:
- 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
- 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்
ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் விலை ரூ.38,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. முன்னதாக ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் லாவா ரெட் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் வாங்குவோருக்கு பிரத்யேக பெட்டி மற்றும் கைலோ ரென் கேஸ் வழங்கப்படுகிறது.