ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் பட்காமில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பாதுகாப்பு பணியில் வீரர்கள்
பாதுகாப்பு பணியில் வீரர்கள்
Published on: 

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் சரார் இ சரிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரைக் கண்டதும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com