மும்பை கைரானி கடையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 13 பேர் பலி: தீவிபத்துக்கு காரணமான ஒருவர் கைது

மும்பை நகரின் கைரானி பகுதியில் உள்ள கடையில் ஏற்பட்ட தீவிபத்துக்கு காரணமான ஒருவரை போலீசார் இன்று இரவு கைது செய்தனர்.
மும்பை கைரானி கடையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 13 பேர் பலி: தீவிபத்துக்கு காரணமான ஒருவர் கைது
Published on: 

மும்பை:

மும்பை நகரின் கைரானி பகுதியில் உள்ள கடையில் ஏற்பட்ட தீவிபத்துக்கு காரணமான ஒருவரை போலீசார் இன்று இரவு கைது செய்தனர்.

மராட்டிய மாநிலம் மும்பையின் கைரானி சாலையில் பர்சான் என்ற கடை உள்ளது. இந்த கடையில் இன்று அதிகாலை  திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது கட்டிடத்தின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த பலர் தீயில் சிக்கி கொண்டனர்.

தகவலறிந்து 25-க்கு மேற்பட்ட தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். தீயை அணைக்க கடுமையாக போராடினர்.

இந்த தீயில் சிக்கி 12 பேர் பலியானார்கள். மேலும் பலர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சார வயரில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே தீ விபத்து நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பர்சான் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com