பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் சென்னையை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு விமானத்தில் போதைப் பொருள் கடத்துவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து சென்று மலேசியாவிற்கு விமானத்தில் கடத்த முயன்ற ரு.2 கோடி மதிப்பிலான 10 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் நைனா முகம்மது என்பவரை கைது செய்தனர். அவர் 35 சிறிய பைகளில் இந்த போதைப்பொருளை வைத்து இருந்தது தெரிய வந்தது.

இந்த போதைப்பொருளை அவர் இலங்கை மற்றும் மலேசியாவிற்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com