கோவையில் மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை

கோவையில் மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை வழுக்குப்பாறை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி சரஸ்வதி (65). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக தன் மகளிடம் மருந்து வாங்கி தருமாறு கேட்டார்.

ஆனால் அவர் மருந்து வாங்கித் தர மறுத்தார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட சரஸ்வதி சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

பொள்ளாச்சி கோவில் பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (36). தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த சிவகுமார் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com