ஜோ பிடன் இப்படி தான் வெற்றி பெற்றார் என கூறி வைரலாகும் வீடியோ

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் இப்படி தான் வெற்றி பெற்றார் என கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
Published on

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகி உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட டொனாட் டிரம்ப்பை விட ஜோ பைடன் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்று இருக்கிறார். எனினும், தோல்வியை டிரம்ப் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.  

இந்நிலையில், அமெரிக்க தேர்தலில் விதிமீறல் அரங்கேறியதாகவும், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ சிசிடிவி கேமராவில் பதிவானதாக கூறப்படுகிறது. 

அந்த வீடியோவில் வாக்குச்சீட்டுகளை சிலர் வாக்குப்பெட்டியில் போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த வீடியோ அமெரிக்க தேர்தலில் இப்படி தான் முடிவுகள் மாற்றப்பட்டு இருக்கிறது எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் அது அமெரிக்க தேர்தலின் போது எடுக்கப்படவில்லை என்பதும் அது ரஷ்யாவில் எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில் வைரல் வீடியோ சமீபத்திய தேர்தலின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com