சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு 4 மாத சம்பளம் முன்பணமாக வழங்கப்படும் - ஒடிசா அரசு அறிவிப்பு

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 4 மாத சம்பளம் முன்பணமாக வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
முதல் மந்திரி நவீன் பட்நாயக்
முதல் மந்திரி நவீன் பட்நாயக்
Published on

புவனேஷ்வர்:

கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற்கு பின்னரும் நிலைமை எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத சூழல் உள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில அரசுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 4 மாத சம்பளம் முன்பணமாக வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவுக்கு முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com