

74 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது. நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதம், நிக்கோல்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
தொடக்க வீரரான லாதம் 370 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 176 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 5-வது வீரராக களம் இறங்கிய நிக்கோல்ஸ் 225 பந்துகளில் 162 ரன்கள் (அவுட் இல்லை) குவித்தார். இதில் 16 பவுண்டரிகள் அடங்கும்.
நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை அணிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.