94-க்கு 5 என்று தத்தளித்த இங்கிலாந்தை தூக்கி நிறுத்திய பேர்ஸ்டோவ்

நியூசிலாந்துக்கு எதிரான கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் இங்கிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் சேர்த்துள்ளது. #NZvENG
94-க்கு 5 என்று தத்தளித்த இங்கிலாந்தை தூக்கி நிறுத்திய பேர்ஸ்டோவ்
Published on

ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் திணறியதுபோல், இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் திணறியது. டிம் சவுத்தி மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோரின் அபார பந்து வீச்சால் அலஸ்டைர் குக் 2 ரன்னிலும், ஸ்டோன்மேன் 35 ரன்னிலும், வின்ஸ் 18 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 37 ரன்னிலும், தாவித் மலன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 94 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.


52 ரன்கள் அடித்த மார்க் வுட்

6-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் திணறியபோதிலும் பேர்ஸ்டோவ் துணிச்சலாக டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் பந்து வீச்சை எதிர்கொண்டார்.


ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய டிம் சவுத்தி

பென் ஸ்டோக்ஸ் 25 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 8-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் மார்க் வுட் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் மார்க் வுட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 250 ரன்னைத் தாண்டியது.


டிரென்ட் போல்ட்

9-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் லீச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 90 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் அடித்துள்ளது. பேர்ஸ்டோவ் 97 ரன்னுடனும், லீச் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com