கைவிரல் முறிவுடன் பாலோ-ஆன் தவிர்க்க போராடும் ஆஸ்திரேலியா கேப்டன்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் கைவிரல் முறிவு ஏற்பட்ட போதிலும் டிம் பெய்ன் பாலோ-ஆன் தவிர்க்க விளையாடி வருகிறார். #SAvAUS #TimPaine
கைவிரல் முறிவுடன் பாலோ-ஆன் தவிர்க்க போராடும் ஆஸ்திரேலியா கேப்டன்
Published on

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா மார்கிராம் (152), பவுமா (95) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 488 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 110 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது. டிம் பெய்ன் 5 ரன்னுடனும், பேட் கம்மின்ஸ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன டிம் பெய்னுக்கு பெருவிரலில் லேசான முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் களம் இறங்குவாரா? என்ற சந்தேகம் எழும்பியது.

ஏற்கனவே 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆகும் நிலையில் உள்ளதால், டிம் பெய்ன் கைவிரல் முறிவை பற்றி கவலைப்படாமல் விளையாட தீர்மானித்தார்.

அதன்படி கம்மின்ஸ் உடன் இணைந்து இன்று 3-வது நாள் ஆட்டத்தின்போது களம் இறங்கினார். கம்மின்ஸ், டிம் பெய்ன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பேட் கம்மின்ஸ் 92 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது.

8-வது விக்கெட்டுக்கு டிம் பெய்ன் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்திருக்கும்போது 3-வது நாள் ஆட்ட உணவு இடைவேளை விடப்பட்டது. டிம் பெய்ன் 47 ரன்னுடனும், நாதன் லயன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

பாலோ-ஆன்-ஐ தவிர்க்க ஆஸ்திரேலியாவிற்கு இன்னும் 88 ரன்கள் தேவை, டிம் பெய்ன் கைவிரல் முறிவு காயத்துடன் பாலோ-ஆன் தவிர்க்க போராடி வருகிறார். #SAvAUS #SportsNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com