இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வொய்ட் மற்றும் போவல் ஆகியோர் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் ஜோடி சேர்த்தது. ஆனால் அதன்பின்னர் நியூசிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் போவல் 42 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் 7 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. லாத்தம் மற்றும் ராவல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரரகளாக இறங்கினர். அணியின் எண்ணிக்கை 65 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. லாத்தம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.