அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். #USOpen #Djokovic
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
Published on

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) மூன்றாம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் போது நடாலின் வலது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டதால் பாதியில் விலகினார். எனவே, டெல்போட்ரோ வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொருஅரையிறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி பலப்பரீட்சை நடத்தினர். இதில், ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com