வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி பாதிப்பு
மின் உற்பத்தி பாதிப்பு
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திபட்டுபுதுநகர் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன இதில் ஐந்து அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இரண்டாவது நிலை இரண்டாவது அலகில் 600 மெகாவாட் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் நிறுத்தபட்டுள்ளன.

முதல் நிலை முதல் மற்றும் இரண்டு மூன்று அலகில் 630 மெகாவாட் இரண்டாம் நிலை முதல் அலகில் 600 மெகாவாட் மொத்தம் 1230 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.

பழுதினை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீஞ்சூரை அடுத்த வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் தேசிய அனல் மின் கழகமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு முயற்சியாக 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது மூன்றாம் அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளன. முதல் அலகில் மட்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகின்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com