ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்

எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்
Published on

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் நோக்கியா 8 மாடலுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்டு மாத வாக்கில் எச்எம்டி குளோபல் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போன்களுக்கான ஓரியோ அப்டேட் வழங்கப்படுகிறது. அதன்படி நோக்கியா 8 ஓரியோ அப்டேட் நவம்பர் 24-ம் தேதி எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் அறிவித்தார். தனது டுவிட்டரில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். நோக்கியா 8 ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு ஓரியோ பீட்டா ஒரு மாதத்திற்கு முன்வெளியிடப்பட்டது.

1518.1 எம்பி அளவு கொண்ட ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்டுடன் நவம்பர் மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் எச்.எம்.டி. குளோபல் விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நோக்கியா 8 சிறப்பம்சங்கள்:

- 5.3 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் HD LCD டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 13 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா
- 13 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3090 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

அலுமினியம் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக நோக்கியா OZO ஸ்பேஷியல் 360-டிகிரி ஆடியோ போனில் உள்ள மூன்று மைக்ரோபோன்களை பயன்படுத்தி துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com