

புதுடெல்லி:
இந்தியாவில் நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் துவங்குகிறது. ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 5 இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு சென்னை, பெங்களூரு, ஆமதாபாத், கோழிக்கோடு, சண்டிகர், டெல்லி, ஐதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் பூனே உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு துவங்கியது.
மேட் பிளாக், காப்பர், சில்வர் மற்றும் டெம்பர்டு ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 5 இந்தியாவில் ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் நோக்கியா 5 வாங்குவோருக்கு மூன்று மாதம் வேலிடிட்டி கொண்ட 5 ஜிபி டேட்டா ரூ.149க்கு வோடபோன் வழங்குகிறது. இத்துடன் மேக்மைட்ரிப் (Makemytrip.com.) தளத்தில் ரூ.2,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நோக்கியா 5 சிறப்பம்சங்கள்:
* 5.2 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
நோக்கியா 5 ஸ்மார்ட்போன் சீம்லெஸ் அலுமினியம் 6000 சீரிஸ் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், கைககளில் மென்மையான உணர்வை வழங்குகிறது. இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மாப்ட்போன்களில் நோக்கியா 5 அழகிய வடிவமைப்பு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.