நோக்கியா 5 முன்பதிவுகள் துவங்கியது: முழு தகவல்கள்

இந்தியாவில் நோக்கியா 5 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவங்கியுள்ளது. இந்தியாவில் நோக்கியா 5 விலை மற்றும் முன்பதிவு சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
நோக்கியா 5 முன்பதிவுகள் துவங்கியது: முழு தகவல்கள்
Published on

புதுடெல்லி:

எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. நோக்கியா 6 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் என எச்.எம்.டி. குளோபல் தெரிவித்துள்ளது. 

நோக்கியா 3 ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் விலையில், நோக்கியா 5 முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. க்ரோமா விற்பனை மையங்களில் நோக்கியா 5 விலை இந்தியாவில் ரூ.12,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

நோக்கியா 5 சிறப்பம்சங்கள்:

* 5.2 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே

* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 2 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

* 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்

* 3000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 3, மற்றும் நோக்கியா 5 விற்பனை கிட்டத்தட்ட துவங்கி விட்ட நிலையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஜூலை 14-ந்தேதி அமேசான் தளத்தில் பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com