

புதுடெல்லி:
நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு கூடுதலாக இலவச டேட்டா வழங்குவதாக வோடபோன் அறிவித்துள்ளது.
நோக்கியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து அறிவித்துள்ள சலுகையின் கீழ் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 4 ஜிபி அளவு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் நோக்கியா 6 வாங்குவோருக்கு 9 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. வோடபோன் வழங்கும் இலவச டேட்டா பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 4ஜி அல்லது 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களை வாங்கும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 4ஜிபி அளவு கூடுதல் டேட்டா, 1ஜிபி டேட்டா வாங்கும் போது வழங்கப்படும். தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் டேட்டா முதல் மூன்று ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படும்.
நோக்கியா 6 வாங்குவோருக்கு 9 ஜிபி அளவு கூடுதல் டேட்டா ரூ.251 செலுத்தி 1 ஜிபி டேட்டா வாங்கும் போது வழங்கப்படும். இந்த சலுகையும் முதல் மூன்று ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ரீசார்ஜ் விலை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாறுபடலாம் என்றும் வோடபோன் அறிவித்துள்ளது.
போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 வாங்கும் போது 4 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற குறைந்தபட்சம் 1 ஜிபி டேட்டா திட்டம் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். நோக்கியா 6 வாங்குவோருக்கும் 9 ஜிபி அளவு 4ஜி அல்லது 3ஜி டேட்டா வழங்கப்படும்.
வோடபோன் தற்சமயம் அறிவித்துள்ள கூடுதல் டேட்டா சலுகை நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 வாங்குவோருக்கு வோடபோன் சேவை கிடைக்கும் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படும். 3ஜி சேவையில்லாத வட்டாரங்களில் 2ஜி டேட்டா வழங்கப்படும்.