வனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்பசிபிக் நாடுகளில் ஒன்றான வனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. #Vanuatu #Earthquake
வனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on

சிட்னி: 

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் ஏராளமான தீவுக்கூட்டங்கள் உள்ளன. இதில் ஒன்றான வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 என பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 15 முதல் 30 நொடிகள் வரை நில அதிர்வுகள் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் கிழக்குப் பகுதியில் ரிக்டர் 7 அளவுகோலில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Vanuatu #EarthQuake

X

Maalai Malar
www.maalaimalar.com