நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே புதிய கட்சி தொடக்கம்: டி.டி.வி தினகரன் பேட்டி

நாளை புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே புதிய கட்சி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran
நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே புதிய கட்சி தொடக்கம்: டி.டி.வி தினகரன் பேட்டி
Published on

ஊட்டி:

நாளை புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே புதிய கட்சி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற டி.டி.வி தினகரன் தனது அடுத்த அரசியல் நகர்வை கவனமாக மேற்கொண்டு வருகிறார். நாளை எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அவர் புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், குன்னூரில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், நாளை புதிய கட்சி அறிவிப்பு இருக்காது என கூறியுள்ளார். புதிய கட்சி தொடங்குவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் நாளை நிர்வாகிகளுடன் ஆலோசித்து சின்னம், கட்சியை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com